தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்துவது குறித்த முக்கிய அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. வரவிருக்கும் பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில், இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஆண்டுக்கு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவது குறித்தும் அரசுத் தரப்பில் விரிவாக ஆராயப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, அடுத்த ஆகஸ்ட் 15 சுதந்திர தின உரையின் போது முதல்வர் விஜய் வெளியிட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
