தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் சுமார் 1.31 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் ₹1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை ₹2,500-ஆக உயர்த்தும் ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தவெக அரசு திட்டமிட்டுள்ள இந்த உயர்வு இன்னும் ஆறு மாத காலத்திற்குள் முழுமையாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதுவரை தற்போதைய பயனாளிகளுக்கு வழக்கம் போல ₹1,000 வழங்கும் முறை தடையின்றி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விடுபட்ட தகுதியுள்ள பெண்களை புதிய பயனாளிகளாக சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும், நடப்பு மாதத்திற்கான உதவித்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் விரைந்து செலுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
