தமிழ்நாட்டில் இல்லத்தரசிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை விரைவில் ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்படும் என்ற செய்தி தமிழக முழுவதும் பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கே.ஜெகதீஸ்வரி மற்றும் அமைச்சர் மரியவில்சன் ஆகியோர் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அதற்கான தரவு சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக இல்லத்தரசிகளுக்குத் தீபாவளி சர்ப்ரைஸ் பரிசாக மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் விஜய் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கி கணக்கு விவரங்கள் சரிபார்க்கப்பட்டு அத்தனை தகுதியுள்ள மகளிர்க்கும் இத்தொகை தடங்கலின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது தமிழக மகளிரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
