BREAKING: மகளிர் உரிமைத் தொகை….. காலையிலேயே இல்லத்தரசிகளுக்கு தமிழக அரசு இரட்டிப்பு மகிழ்ச்சி….!

By Nanthini on ஐப்பசி 15, 2026

Spread the love

அக்டோபர் மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 இன்று காலை முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வரும் நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாதத்திற்கான தொகையையும் முன்கூட்டியே வழங்க அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவது இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்யும் இந்தத் திட்டத்தின் மூலம் வழக்கம்போல இன்றும் காலை முதல் குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருப்பதால், பண்டிகைக் காலச் செலவுகளைச் சமாளிக்க உதவியாக இருக்கும் எனப் பலரும் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர்.