அதிர்ச்சி..! மகளிர் உரிமைத்தொகை ரூ.2500..? லிஸ்டில் இருந்து நீக்கப்படும் பெயர்கள் யார் யாருடையது..?

By Soundarya on ஆனி 3, 2026

Spread the love

தமிழகத்தில் தவெக அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இத்திட்டத்தை முறையாக மறுசீரமைக்க கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்தார். தற்போதைய தகவல்களின்படி, தவெக தேர்தல் அறிக்கையில் 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ரூ.2,500-ம், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.3,000-ம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இருப்பினும், தகுதியற்றவர்கள், இறந்தவர்கள் மற்றும் வடமாநிலத்தவர்களின் பெயர்களை நீக்கி, பயனாளிகளின் எண்ணிக்கையை துல்லியமாக கண்டறியும் விரிவான மறுசீரமைப்புப் பணிகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த புதிய மாற்றுத் திட்டத்திற்கான விரிவான நிதிநிலை அறிக்கை வரவிருக்கும் பட்ஜெட்டில் முறைப்படி அறிவிக்கப்படும் என Getlokal நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இடைப்பட்ட காலத்தில் ஏழை எளிய பெண்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, முந்தைய திமுக அரசு வழங்கி வந்த ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர ரூ.1,000 உதவித்தொகை எவ்வித தடையுமின்றி தற்போதும் தவெக அரசால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.