தூத்துக்குடி மாவட்டம் தெய்வ செயல்புரம் கிராமத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் கோவையில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த சம்பவம் ஓய்வதற்குள் தூத்துக்குடியில் மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தெய்வ செயல் புறம் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று முன்தினம் பிற்பகல் தன்னுடைய தோட்டத்திற்கு களை எடுக்கும் வேலைக்கு சென்றுள்ளார்.
பிறகு தனியாக வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த ஆறுமுகமங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் தனியாக நடந்து வந்த பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்தப் பெண் கூச்சலிட அருகில் தோட்டங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் ஓடி வந்து அவரை மீட்டதுடன் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபரையும் பிடித்தனர். உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில், பெற்ற தாயே தன் சொந்தக் குழந்தைகளைக் கம்பத்தில் கட்டி வைத்துக் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிகரமான…
இயற்கை தனக்குள் எண்ணற்ற மர்மங்களைக் கொண்டு மனிதர்களை எப்போதும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில், தவளைகளின் உலகம் தொடர்பான…
நெல்லையில் 5 வயது பெண் குழந்தையின் கண்முன்னே இளம்பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை…
விஜய் முதலமைச்சர் ஆகக் கூடாது எனத் தான் தடுக்க முயன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் மிகக் கடுமையான வார்த்தைகளில்…
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அந்த நிலையை அடைவதைத் தான் தடுக்க முயன்றதாகப் பரவும் வதந்திகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி…
டெல்லியின் புகழ்பெற்ற 'சோர் பஜார்' என்ற பெயரைக் கேட்டாலே, மலிவான பொருட்கள் மற்றும் மோசடி பற்றிய பிம்பங்களே பலரது மனதில்…