மகளிர் உரிமைத்தொகை உயர்வு.. குடும்ப தலைவிகளுக்கு இனிப்பான செய்தி… திமுகவின் மாஸான அறிவிப்பு….!

By Nanthini on தை 18, 2026

Spread the love

தமிழகத்தில் தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை நேரடியாக குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான குடும்ப தலைவிகள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும், ஆண்களுக்கு இலவச பேருந்து என அதிமுக அதிரடி வாக்குறுதிகளை அளித்தது.

இந்நிலையில் NDA மட்டுமல்லாமல் தமிழக வெற்றிக்கலகம் கட்சிக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் வழங்க திமுக தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர் உரிமைத்தொகை உயர்த்தவும் திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் இது தொடர்பான மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.