விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியை சேர்ந்த ரமா என்ற பெண் ஒருவர் அமேசான் விற்பனை தளத்தில் 400 ரூபாய் மதிப்புள்ள ஒரு பிளாஸ்க் பாட்டிலை ஆர்டர் செய்துள்ளார். அதன் பிறகு ஓரிரு நாட்களில் அவருக்கு ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அப்போது ஆசை ஆசையாய் பிரித்துப் பார்த்து அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அங்கே பிளாஸ்க் வருவதற்கு பதிலாக ஒரு கருங்கல் இருந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அமேசான் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படத்துடன் விஷயம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் ரமா பேசிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. கடைகளுக்கு செல்ல சங்கடப்பட்டு கொண்டு ஆன்லைனில் நாம் ஆர்டர் செய்கிறோம். நிறைய பேருக்கு நல்ல முறையில் ஆர்டர் கிடைத்து நல்ல பொருளாக அமைந்து விடுகின்றது. என்னை போன்ற ஏமாளிகளுக்கு இப்படி கல்லை வைத்து அனுப்புகிறார்கள் என்று அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வர பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
