கர்நாடக மாநிலம் சிக்மகளூர் அடுத்துள்ள அரேனூர் கிராமத்தை சேர்ந்த சந்தியா என்பவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நான்கு வருடங்களாக தாய் வீட்டில் வசித்து வருகின்றார். இதனிடையே சந்தியாவிற்கும் அவருடைய அத்தை மகன் ஜனார்த்தன் என்பவருக்கும் இடையே பதக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர். சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தொடர்ந்து தகராறு நடந்து வந்துள்ளது. இப்படியான நிலையில் சந்தியா திடீரென்று மாயமானார். பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் உடனே போலீசில் புகார் அளித்தனர். காணாமல் போன சந்தியா மீண்டும் வீடு திரும்பினார்.
அவர் வீட்டுக்கு வந்த மறுநாளே திடீரென்று ஜனார்த்தனன் வீடு புகுந்து சந்தியாவை கடுமையாக தாக்கி கத்தியால் குத்தி கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சந்தியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சந்தியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜனார்த்தனனை கைது செய்தனர். தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
