கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகே மேல் சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவருடைய மனைவி கோவிந்தம்மாள் (55). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள் உள்ள நிலையில் 4 பேருக்கும் திருமணம் நடைபெற்ற தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவிந்தம்மாளின் கணவரான முருகன் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட தாய் கோவிந்தம்மாள் தனது மகளான மணிகண்டன் வீட்டில் தங்கி அருகில் உள்ள காடுகளில் மாடு மேய்த்தும் ஏரி வேலைக்குச் சென்றும் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காலையில் கோவிந்தம்மாள் மாடுகளை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள மரத்தில் கட்டிவிட்டு 100 நாள் ஏரி வேலைக்கு சென்றுள்ளார். பிறகு மாலை 4.30 மணி அளவில் ஏரி வேலை முடிந்த பிறகு வழக்கம் போல தனது மாடுகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்வதாக சக வேலையாட்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் மாலை 7 மணி ஆகியும் அவர் வீட்டுக்கு செல்லவில்லை என தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த மணிகண்டன் அருகில் உள்ள உறவினர்களுக்கு போன் செய்து அம்மா உங்க வீட்டுக்கு வந்தாங்களா என்ற விசாரித்துள்ளார். ஆனால் அவரது உறவினர் வீட்டுக்கு அம்மா செல்லாத நிலையில் அதிர்ச்சி அடைந்த மகன் அவர் வேலை செய்த இடம் உள்ளிட்ட பல பகுதிகளில் தேடி உள்ளார்.
பிறகு மாடு மேய்த்த இடங்களில் சென்று பார்த்தபோது அங்கு கோவிந்தம்மாள் காது அறுக்கப்பட்ட நிலையில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். மேலும் அவருடைய காதில் இருந்து அரை சவரன் தங்க கம்மல் கழட்டப்பட்டிருந்ததும் அதேபோல காலில் இருந்த வெள்ளி கொலுசு கழட்டப்பட்டதும் தெரிய வந்தது. உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கோவிந்தம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போது நகைக்காக கோவிந்தம்மாள் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மாடு மேய்க்க சென்ற பெண் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…