இனி மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது… தமிழக அரசு கொடுத்த முக்கிய அப்டேட்..!!

By Soundarya on கார்த்திகை 11, 2025

Spread the love

உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்த லட்சக்கணக்கான குடும்ப தலைவிகள் எப்போது தொகை வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதில், எத்தனை குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.  இந்நிலையில் டிசம்பர் 15 முதல் புதிய பயனர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும்.

இதற்கான “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நவம்பர் 15-ஆம் தேதியோடு முடிவடைகின்றன. அதற்குப் பிறகு யாரும் விண்ணப்பிக்க முடியாது என்று அரசு அறிவித்துள்ளது. எனவே இதற்கு தகுதியான பெண்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.