ஏய்… எங்ககிட்டயே 500 ரூபாய் கேக்குறியா?… போலீஸார் கண்ணெதிரே யூடியூபர் தம்பதி மீது… பெண்கள் கொடூரத் தாக்குதல்… இணையத்தில் வீடியோ வைரல்…!

By Swetha on புரட்டாதி 29, 2026

Spread the love

தானே கிழக்கு கோப்ரி பகுதியில் உள்ள ஆடை சந்தையில், யூடியூபர் சித்து அபங்கே ஒவ்வொரு பெண்ணிடமும் தலா ரூ 500 கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வசூல் கோரிக்கையைக் கண்டித்தும், அவர் மீது புகார் அளிப்பதற்காகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் ஒன்றாகத் திரண்டு கோப்ரி காவல் நிலையத்திற்குச் சென்றனர்.

காவல் நிலைய வளாகத்திற்குள் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது திடீரென வன்முறையாக மாறியது. அங்கிருந்த காவலர்களின் முன்னிலையிலேயே, ஆத்திரமடைந்த பெண்கள் குழு யூடியூபர் சித்து அபங்கே மற்றும் அவரது மனைவியை கடுமையாகத் தாக்கியதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

   

https://twitter.com/nextminutenews7/status/2104516379810603056/video/1

   

காவல் நிலையத்திற்குள்ளேயே நடந்த இந்தத் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, பெண்களின் புகார் குறித்தும், காவல் நிலையத்தில் நடந்த வன்முறை குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.