“இன்று நான் சாகப்போறேன்.. ரொம்ப சித்திரவதை… அவங்க தான் இதுக்கெல்லாம் காரணம்.. தற்கொலைக்கு முன் கண்ணீர் வீடியோ வெளியிட்ட பெண்..!!

By Soundarya on வைகாசி 13, 2026

Spread the love

லக்னோவின் கோமதி நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசித்து வந்த ரத்னா என்ற பெண், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக வெளியிட்ட வீடியோ அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், “இன்று நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்; இதற்கு சரத் சிங் மற்றும் பல்லவி ஜோஷி ஆகிய இருவரே காரணம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சரத் சிங் தன்னை மனரீதியாக சித்திரவதை செய்ததாகவும், பல்லவி ஜோஷி தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் அவர் அந்த வீடியோவில் குற்றம் சாட்டியுள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதற்குச் சற்று முன்பு, ரத்னா தனது அறிமுகமான ஒருவருக்கு போன் செய்து இது குறித்துத் தகவல் தெரிவித்துள்ளார். அந்த நபர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கவே, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இருப்பினும், அவர்கள் அங்கு செல்வதற்கு முன்பே ரத்னா தனது உயிரை மாய்த்துக் கொண்டார். தற்போது இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.