ஓசூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தால் கணவனை மனைவியே சேலையால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர்பேட்டை பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (32) மற்றும் அம்சவள்ளி (28) ஆகிய இருவரும் 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஒன்பது ஆண்டுகளாக ஓசூரில் வசித்து வந்த இந்தத் தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். பார்த்திபன் மூட்டை தூக்கும் தொழிலாளியாகவும், அம்சவள்ளி கட்டிடத் தொழிலாளியாகவும் பணியாற்றி வந்தனர்.
கட்டிட வேலைக்குச் சென்ற இடத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கரண் தாஸ் (21) என்ற இளைஞருடன் அம்சவள்ளிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்த இந்த கள்ளக்காதல் விவகாரம், பார்த்திபனுக்கு தெரியவரவே குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை ஒழித்துக்கட்ட அம்சவள்ளி திட்டமிட்டுள்ளார்.
சம்பவத்தன்று இரவு, பார்த்திபன் மதுபோதையில் வீட்டிற்கு வந்தபோது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அம்சவள்ளி, தான் உடுத்தியிருந்த சேலையாலேயே கணவனின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், எவ்வித பதற்றமும் இன்றி பார்த்திபன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி உறவினர்களையும் போலீசாரையும் நம்ப வைக்க நாடகமாடியுள்ளார்.
தகவலறிந்து வந்த போலீசார், பார்த்திபனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிரேதப் பரிசோதனை முடிவுகள் மற்றும் போலீசாரின் தீவிர விசாரணையில் அம்சவள்ளி முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகம் வலுத்தது. இறுதியில், கள்ளக்காதலுக்காகத் தனது கணவனைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் அம்சவள்ளியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…
லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…
பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…