சமூக வலைதளங்களில் பரவி வரும் சுவாரசியமான வீடியோ ஒன்றில், பெண் ஒருவர் கடந்த சில நாட்களாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் பழகி வந்துள்ளார். இறுதியில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனது காதலைத் தெரிவித்துள்ளார். ஆனால், அப்பெண்ணின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர், அவர் ஏதோ ஏமாற்று வேலையில் ஈடுபடப் பார்க்கிறார் என்பதை உணர்ந்து அவரது காதலை உடனடியாக நிராகரித்துள்ளார்.
தான் நிராகரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத அப்பெண், உடனடியாக மனநிலையை மாற்றிக் கொண்டு நடுரோட்டில் சத்தமிட்டு, ஆட்டோ ஓட்டுநர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி டிராமா செய்ய தொடங்கியுள்ளார். இதனால் அங்கு பொதுமக்கள் கூட தொடங்கினர். ஆனால், உஷாராகச் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர், ஆரம்பத்திலிருந்தே தனது மொபைல் போன் கேமராவை ஆன் செய்து அனைத்தையும் வீடியோவாகப் பதிவு செய்து கொண்டு இருந்தார். கேமரா பதிவாகிக் கொண்டிருப்பதை அறிந்ததும் அந்தப் பெண்ணின் நாடகம் அம்பலமாகி, அங்கிருந்து நைஸாக நழுவிச் சென்றுள்ளார். ஆட்டோ ஓட்டுநரின் இந்தச் சமயோசித புத்தி கூர்மையை இணையவாசிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
