3 குழந்தைகளுடன் இருந்த பெண் கழுத்தறுத்துக் கொலை… கதறி அழுத கணவர்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

By Devi Ramu on வைகாசி 2, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லிசாடி கேட் பகுதியில், மூன்று பெண் குழந்தைகளுடன் வீட்டில் இருந்த பெண் ஒருவர் மர்ம நபர்களால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். கூர்மையான ஆயுதத்தால் அந்தப் பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த சமயத்தில் அந்தப் பெண்ணின் கணவர் கடைவீதிக்குச் சென்றிருந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவம் திட்டமிட்ட படுகொலையா என்ற கோணத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இக்கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பெண்ணின் சகோதரர், கணவர் மீது சந்தேகம் தெரிவித்துப் புகார் அளித்துள்ளதால் வழக்கு புதிய திருப்பத்தைப் பெற்றுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக இக்கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து மீரட் போலீசார் தீவிரமாகப் புலனாய்வு செய்து வருகின்றனர். அந்த பெண்ணின் கணவர் அழுத வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.