பஞ்சாப் மாநிலம் தரண் தரண் மாவட்டத்திலுள்ள பட்டி நகரின் கார்டன் காலனியில், ஒருதலைக் காதலால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஒரு இளைஞன் இளம்பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட ரூபியும், தாக்குதல் நடத்திய கரண் என்பவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். ரூபியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்த கரண், அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மணம் முடிந்ததால் கடும் அதிருப்தியில் இருந்துள்ளார். இந்த ஆத்திரத்தின் வெளிப்பாடாகவே இந்த கொடூரத் தாக்குதலை அவர் அரங்கேற்றியுள்ளார்.
திருமணம் முடிந்து தனது கணவருடன் ரூபி வெளியே சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த கரண் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ரூபியை நோக்கி சரமாரியாகச் சுட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரூபி உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய இளைஞனை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…