“பில்லி சூனியம் பெயரால் கொடூரம்”…. இளம்பெண்ணை 2 மாத பிஞ்சு குழந்தையுடன் தீவைத்து எரித்த கிராமத்தினர்… நாட்டையே நடுங்க வைக்கும் சம்பவம்….!

Spread the love

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மூடநம்பிக்கையின் உச்சமாக, மாந்திரீகம் செய்வதாகக் கூறி இளம் பெண் ஒருவரையும் அவரது இரண்டு மாதக் கைக்குழந்தையையும் கிராம மக்கள் தீவைத்துக் கொளுத்தியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு சிங்பம் மாவட்டம் சாய்பசா கிராமத்தைச் சேர்ந்த கொல்ஹன் சிங்கு என்பவரின் இரண்டாவது மனைவி ஜோதி சிங்கு (32). இவருக்கு இரண்டு வயதில் ஒரு மகனும், இரண்டு மாதத்தில் ஒரு கைக்குழந்தையும் இருந்தனர்.

ஜோதி சிங்கு மாந்திரீகத்தில் ஈடுபடுவதாக அந்த கிராமத்தினர் நீண்டகாலமாகச் சந்தேகித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி இரவு 10-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கொல்ஹன் சிங்குவின் வீட்டிற்குச் சென்று ஜோதி சிங்குவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கிராமத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்ததற்கு ஜோதி சிங்கு செய்த மாந்திரீகமே காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கிராமத்தினர் தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஜோதி சிங்கு மற்றும் அவரது கையில் இருந்த இரண்டு மாதக் குழந்தை மீதும் ஊற்றித் தீ வைத்துள்ளனர். இதில் தாயும் சேயும் சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர். கொல்ஹன் சிங்கு மீதும் தீ வைக்கப்பட்ட போதிலும், அவர் லேசான காயங்களுடன் தப்பி ஓடி உயிர்பிழைத்தார்.

மறுநாள் காலையில் பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூரக் கொலை தொடர்பாக கிராமத்தைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அறிவியல் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும், இது போன்ற மூடநம்பிக்கைகளால் பிஞ்சு குழந்தையும் தாயும் கொல்லப்பட்ட சம்பவம் மனிதநேயமற்ற செயலாகப் பார்க்கப்படுகிறது.

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

ஏங்க எழுந்திரிங்க… நாம வீட்டுக்குப் போயிடலாம்… விபத்தில் இறந்த கணவனின் உடலைப் பிடித்து கதறிய மனைவி… திருவாரூரில் நடந்த சோகம்…!

திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…

13 minutes ago

அட கொடுமையே… பட்டாசு வெடித்தால் நிரந்தர பார்வை இழப்பு?… மருத்துவர்கள் விடுக்கும் அதிரடி எச்சரிக்கை… மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…

30 minutes ago

திக் திக்… மகளுடன் தனியாக இருந்த ஊழியர்… ஆத்திரத்தில் முதலாளி செய்த பகீர் காரியம்… பெங்களூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!

பெங்களூரில் நிகழ்ந்த ஒரு கோரச் சம்பவத்தில், தன் உற்பத்திப் பிரிவில் பணிபுரியும் கிரண் என்பவரை, தன் மகளுடன் வீட்டில் தனித்திருந்த…

34 minutes ago

என்னது… விஜய்யும் த்ரிஷாவும் ஒண்ணாவா?… ஜெகன் மோகன் ரெட்டி திருமணத்தில் நடந்த அதிரடி என்ட்ரி… உறைந்துபோன ரசிகர்கள்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ…!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…

54 minutes ago

“நவம்பர் 13-க்குப் பின் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் பூகம்பம்…. CM விஜய் ஆட்சிக்கே ஆபத்தா?”… திமுக-அதிமுக ரகசிய கூட்டணி?…. தலைமைச் செயலகத்தையே அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்….!

மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…

57 minutes ago