உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிறந்த மூன்று நாண்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று திடீரெனக் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசுத் திட்டத்தின் கீழ் பணம் பெற்று தருவதாக கூறி தாயிடமும் பாட்டியிடமும் நைசாகப் பேச்சுக்கொடுத்த பெண் ஒருவர், கண் இமைக்கும் நேரத்தில் குழந்தையைத் தூக்கிச் சென்றுள்ளார்.
தகவலறிந்த நொய்டா போலிஸார், உடனடியாகச் தீவிர விசாரணையில் இறங்கி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் சம்பவம்பற்றி துரிதமாகச் செயல்பட்ட போலிஸார், வெறும் 8 மணி நேரத்திற்குள் உபாசனா (26) என்ற பெண்ணைக் கைது செய்து குழந்தையைப் பத்திரமாக மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், குழந்தையில்லாத தனது தங்கைக்குக் கொடுப்பதற்காகவே இந்தக் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. விரைந்து செயல்பட்ட போலிஸாருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…
சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…