உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் மனித உறவுகளின் மாண்பையும், நம்பிக்கையையும் முற்றிலுமாகத் தகர்த்தெறிந்த ஒரு குடும்ப விவகாரச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பிரமோத் சிங் என்ற நேர்மையான நபர் தனது சொந்தக் கடையில் குறைந்த லாபத்தில் நல்ல மருந்துகளை விற்று அப்பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றுத் தன் உழைப்பால் சொத்துக்களைச் சேர்த்துள்ளார். ஆனால், தனது கணவர் வியாபாரத்தில் பிஸியாக இருந்ததாலும், போதிய நேரம் ஒதுக்காததாலும் அவரது மனைவி கல்பனா மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்.
இந்நிலையில், அப்பகுதிக்குக் வேலைக்கு வந்த ராஜீவ் என்ற இளைஞருடன் கல்பனாவுக்கு நட்பு ஏற்பட்டு, பின்னர் அது எல்லை மீறிய உறவாக மாறியுள்ளது. கணவரிடம் வேலைக்கு ஆள் தேவைப்படுவதாகக் கூறி ராஜீவை வீட்டிற்குள் அறிமுகப்படுத்திய கல்பனா, கணவனின் உழைப்பில் கிடைத்த பணத்தையும் வசதியையும் அனுபவித்துக் கொண்டே அந்த இளைஞருடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பான பதிவுகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், குடும்ப வாழ்க்கையில் நம்பிக்கையும் நேரமும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துவதாக நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
