“மனைவியின் தங்கையுடன் காதல்….” மாமா என கூறி காதலிக்கு திருமணம்…! அடுத்த நாளே புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on ஆடி 16, 2026

Spread the love

வேலூர் மாவட்டம் சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவருக்கு, சென்னையில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்த முனுசாமி என்பவர் மூலமாக அபிநயா என்ற பெண் அறிமுகமாகி, கடந்த மாதம் சோளிங்கர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. பெண்ணின் மாமா என்று கூறிக்கொண்ட முனுசாமியின் பேச்சை நம்பி, கஜேந்திரனின் குடும்பத்தினர் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை சொந்தமாகச் செலவு செய்து இந்தத் திருமணத்தை நடத்தினர். ஆனால், புதுப்பெண் அபிநயா திருமணமான அடுத்த நாளே கணவருடன் பேசுவதைத் தவிர்த்து, முனுசாமியுடன் அலைபேசியில் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இந்த நிலையில், திருமணமான 15 நாட்களிலேயே நள்ளிரவில் அவர் திடீரென வீட்டை விட்டு மாயமானார்.

இதுகுறித்து கணவர் வீட்டார் காவல் நிலையத்தில் புகாரளித்த போது, அபிநயா தனது மாமா முனுசாமியுடன் அங்கு நேரில் ஆஜராகி, கஜேந்திரனுடன் வாழப் பிடிக்கவில்லை என்றும், முனுசாமியுடன் தான் செல்லப் போவதாகவும் அதிரடியாகத் தெரிவித்தார். விசாரணையில், அபிநயா உண்மையில் முனுசாமியின் மனைவியின் தங்கை என்பதும், காதலர்களான இருவரும் திட்டமிட்டே பணத்திற்காகவும் நகைகளுக்காகவும் இந்த ஏமாற்று நாடகத்தை நடத்தியதும் அம்பலமானது. இதனால் அதிர்ச்சியடைந்த கஜேந்திரன், தன்னை வஞ்சித்த முனுசாமி, அபிநயா மற்றும் அவர்களுக்குத் துணையாக இருந்த ஜோதி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, தனது திருமணச் செலவுத் தொகையை மீட்டுத் தருமாறு வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உருக்கமாகப் புகாரளித்துள்ளார்.