அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய பெண் ஒருவர், அந்த அனுபவம் தனது வாழ்க்கையையும் வெற்றி குறித்த பார்வையையும் முற்றிலும் மாற்றி அமைத்ததாகப் பகிர்ந்துள்ள தகவல் இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த சாலி சிம்மன்ஸ் என்ற பெண், ஹெல்த்கேர் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்து வந்தார். கணினி திரையையே நாள் முழுவதும் பார்த்து அலுத்துப்போன சூழலில், கார்ப்பரேட் மன அழுத்தத்திலிருந்து விடுபட தனது வேலையைத் துறந்துவிட்டு நாய்களைப் பராமரிக்கும் ‘ரோவர்” என்ற ஆன்லைன் தளத்தின் மூலம் நாய் வளர்ப்பு மற்றும் பராமரிப்புச் சேவையைத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் 30 நிமிட நடைப்பயிற்சிக்கு 17 டாலர் கட்டணம் வசூலித்த அவர், தனது சிறந்த சேவையால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று இரவில் தங்கிப் பராமரிக்க 84 டாலர் வரை கட்டணத்தை உயர்த்தினார். தினமும் 18,000 படிகளுக்கும் அதிகமாக நடந்து உடலையும் மனதையும் ஆரோக்கியமாக்கிய அவர், பணத்தையும் பட்டங்களையும் விட மனநிறைவே உண்மையான வெற்றி என உணர்ந்ததாகக் கூறுகிறார். மீண்டும் கார்ப்பரேட் உலகிற்குத் திரும்பியபோதிலும், இந்த 4 மாத நாய் பராமரிப்பு அனுபவமே தனது வாழ்க்கையின் மிகச் சிறந்த தொழில்முறைப் அனுபவம் எனக் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்
