“நான் சாகவில்லை” தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்… சவப்பெட்டிக்குள் கேட்ட சத்தம்… திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி…!!

By Soundarya on கார்த்திகை 25, 2025

Spread the love

பாங்காக்கின் புறநகர்ப் பகுதியில் உள்ள நொந்தபுரியில் உள்ள ஒரு கோவிலில், தகனச் சடங்குகள் தொடங்குவதற்கு சற்று முன்பு, 65 வயதான தாய்லாந்து பெண் ஒருவர் தனது சவப்பெட்டியில் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கிற்காக சடலத்தை தயார் செய்துகொண்டிருந்தபோது கோயில் ஊழியர்கள், சவப்பெட்டியின் உள்ளே இருந்து அசைவுகளைக் கண்டனர்.

அந்தப் பெண் மூச்சு வாங்கிக் கொண்டு, சவப்பெட்டியின் உட்புறத்தில் மெதுவாகத் தட்டிக் கொண்டிருந்தபோது, ​​பணியாளர்கள் அதைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது அவர் உயிருடன் இருந்துள்ளார். இதனையடுத்து மடாதிபதி அப்பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உத்தரவிட்டு, உடனடியாக நடவடிக்கைகளை நிறுத்தினார். அந்தப் பெண் சோந்திராட் சாகுல்கூ என்று அடையாளம் காணப்பட்டார். அவர் சுமார் இரண்டு ஆண்டுகளாக படுக்கையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.