திருப்பூர் மாவட்டம் அவிநாசி வள்ளுவர் வீதியை சேர்ந்த சின்னப்பராஜ் (63) என்பவர் சிந்தாமணி தியேட்டர் பகுதியில் மர அறுவை ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில் நடுவச்சேரி பகுதியில் தனியாக வசித்து வந்த கூலி தொழிலாளியான கடலூர் பகுதியை சேர்ந்த பூமணி (42) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனிடையே சின்னப்பராஜ் மேலும் சில பெண்களுடன் பழகி வந்துள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பூமணி தட்டி கேட்ட நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பூமணி இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி சின்னப்பராஜை ஆசை வார்த்தை கூறி அழைத்துள்ளார்.
அவரின் பேச்சை நம்பி சின்னப்பராஜ் சென்ற நிலையில் நேற்று இரவு இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையோர தடுப்பு சுவரின் மீது அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த பூமணி தான் கொண்டு வந்த செல்போன் பவர் பேங்க்கால் சின்னப்ப ராஜின் தலையில் அடித்துள்ளார். இதில் நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்த நிலையில் ஏற்கனவே திட்டமிட்டு கேனில் கொண்டு வந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றினார்.
அதிர்ச்சடைந்த அவர் உயிர் பிழைக்க தப்பியோட முயன்ற நிலையில் ஆத்திரம் தீராத பூமணி சின்னப்பராஜின் உடலில் தீயை வைத்து எரித்தார். ஏற்கனவே தலையில் பட்ட காயத்தால் நிலைகுலைந்த சின்னப்பராஜ் உடலில் தீப்பற்றி பாதி எரிந்த நிலையில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து வீட்டுக்கு சென்ற பூமணி அதிகாலை காவல் நிலையத்தில் சரணடைந்தார். உடனே சம்பவி இடத்திற்கு விரைந்த போலீசார் தீயில் கருகிக்கிடந்த சின்னப்பராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…