உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த 46 வயதான பெண் ஒருவருக்கு பள்ளி செல்வம் வயதில் இளம் பருவத்தில் இரண்டு மகள்கள் உள்ளன. இவருடைய அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே வசித்து வந்த பொறியாளர் ஒருவரிடம் அந்த பெண்ணின் மகள்கள் இருவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு டியூஷன் படித்து வந்தனர். 2014 ஆம் ஆண்டு அந்த பெண்ணின் கணவர் திடீரென உயிரிழந்த நிலையில் டியூஷன் எடுத்து வந்த பொறியாளர் உடன் சிறுமிகளின் தாய்க்கு நட்பு ஏற்பட்டு அதன் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.
உனக்கு மனைவியாக உன்னுடைய மகள்களுக்கு தந்தையாக இருப்பேன் என்று பொறியாளர் நம்பிக்கை கூறிய பேச்சை நம்பி சிறுமிகளின் தாய் அந்த பொறியாளர் உடன் ஒரு கட்டத்தில் லிவ்விங் இன் ரிலேஷன்ஷிப் முறையில் ஒன்றாக வாழத் தொடங்கினார். இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் பொறியாளரின் தவறான பார்வை மூத்த மகளின் மீது பட்டது. தந்தையாக இருப்பேன் எனக் கூறிய அந்த பொறியாளர் மூத்த மகளிடம் சில்மிஷம் செயல்களில் ஈடுபடுவது போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இது குறித்து தனது தாயிடம் சிறுநீர் தெரிவித்த நிலையில் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணும் பொறியாளரை கண்டித்தார். இருந்தாலும் அவர் ஒரு கட்டத்தில் மூத்த மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் அந்த பெண்ணுக்கும் பொறியாளருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொறியாளருக்கும் சிறுமிகளின் தாய்க்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த அந்த பெண் தனது இரண்டு மகள்களின் உதவியோடு அருகில் இருந்த கத்தியை எடுத்து பொறியாளரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த சிறுமிகளின் தாய் கொலை செய்யப்பட்ட சடலத்துடன் சுமார் பத்து மணி நேரம் அந்த வீட்டிலேயே இருந்துள்ளார். பிறகு இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொறியாளரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமிகளின் தாயும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதால் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
