போதும்மா இத்தோட நிப்பாட்டிக்கோ… 6 குழந்தைகள் பெற்ற பிறகும் கருத்தடை செய்ய மறுத்த பெண்… இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 18, 2025

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த சோமங்கலம் பகுதியில் வசித்து வரும் கொத்தனார் ராஜ்குமார் (33) சொந்த ஊர் வேலூர். இவர் மாமியார் ஊரான சோமங்கலம் பகுதியில் தன்னுடைய மனைவி மங்கையுடன்(31) வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் 3 பெண் குழந்தைகள் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் என மொத்தமாக ஐந்து குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மங்கை ஆறாவதாக கர்ப்பம் தரித்த நிலையில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் அவருக்கு ஆறாவதாக ஆண் குழந்தை பிறந்தது. ஆறு குழந்தைகள் பெற்ற நிலையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அவரிடம் கூறிய நிலையில் அறுவை சிகிச்சைக்கு பயந்து கொண்டு குழந்தையை தவிக்க விட்டு மருத்துவமனையில் இருந்து மங்கை மாயமானார். இதனைத் தொடர்ந்து மனைவி மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் உடனே போலீசில் புகார் அளித்தனர்.

   

போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வந்த நிலையில் சோமங்கலத்தில் உள்ள தனது வீட்டுக்கு நேற்று வந்து சேர்ந்தார். உடனே இது தொடர்பாக போலீசுக்கு மங்கையின் கணவர் தகவல் கொடுத்த நிலையில் நேரில் வந்து விசாரணை நடத்தினர். தாயை பிரிந்த குழந்தை பால் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவர்கள் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்து மக இடம் ஒப்படைத்தனர். ஆறு குழந்தைகள் பெற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மறுத்து தன்னுடைய ஆறாவது குழந்தையை தாய் தவிக்க விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.