இதுதான் அதிர்ஷ்டம்..! மகளின் பிறந்தநாளுக்கு நகைகளை அடகு வைத்து லாட்டரி சீட்டு வாங்கிய பெண்… இப்போ ரூ.3 கோடிக்கு அதிபதி…!!

By Soundarya on கார்த்திகை 25, 2025

Spread the love

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஒரு பெண், தனது மகளின் பிறந்தநாளுக்கு நான்கு லாட்டரி சீட்டுகளை வாங்குவதற்காக தனது நகைகளை அடகு வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது அவருக்கு 3 கோடி ரூபாய் மதிப்புள்ள லாட்டரி பரிசாக கிடைத்துள்ளது.   சில நாட்களுக்கு முன்பு, ஜெய்ப்பூரைச் சேர்ந்த எளிய காய்கறி விற்பனையாளரான அமித் செஹ்ரா, பஞ்சாப் மாநில லாட்டரி தீபாவளி பம்பர் 2025 இல் ₹11 கோடி  முதல் பரிசை வென்றார். லாட்டரியில் தனது அதிர்ஷ்டத்தை சோதிக்க செஹ்ரா ஒரு நண்பரிடமிருந்து பணம் கடன் வாங்கினார். வெற்றி பெற்ற பிறகு, தனது நண்பருக்கு ₹1 கோடி  வழங்குவதாக செஹ்ரா அறிவித்தார்.

அந்தவகையில் தற்போது லூதியானாவில் உள்ள பன்சி கிராமத்தில் வசிக்கும் இந்தப் பெண், வீட்டு வேலை செய்து வருகிறார். லாட்டரி வென்ற பிறகு, மகேஸ்வரி சாஹ்னி தனது மகளின் பிறந்தநாளுக்கு லாட்டரி சீட்டுகளை வாங்கியதாக விளக்கினார். 12வது நாளில், தனக்கு இதுபோன்ற நல்ல செய்தி கிடைத்தது. தனது மகளின் பிறந்தநாளில் லாட்டரி வாங்குவது அதிர்ஷ்டம் என்று அந்தப் பெண் கூறினார்.  இந்த பணத்தின் மூலம் நான் என் மக்களுக்கு நல்ல கல்வியைக் கொடுப்பேன் என்று கூறியுள்ளார். அவர் தனது மகளுடன் வசிக்கிறார்.   தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றவர் என்பது குரிசிப்பிடத்தக்கது.