“3 ஆண்டுகால காதல்… அவர் வந்துட்டாரே…” தூங்கிக்கொண்டிருந்த கணவனை கொன்று நாடகமாடிய பெண்…! விசரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

By Devi Ramu on புரட்டாதி 2, 2026

Spread the love

பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணமானது. திருமணத்திற்குப் பிறகு அவரது கணவர் பணம் சம்பாதிப்பதற்காகக் குவைத் நாட்டிற்குச் சென்றார். கணவர் வெளிநாட்டில் இருந்த சமயத்தில், அப்பெண்ணுக்கு ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த விவகாரம் தொடர்ந்த நிலையில், சமீபத்தில் கணவர் குவைத்திலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். கணவனுக்கு உண்மை தெரிந்துவிடும் என்ற பயத்தில், மனைவி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து இரவில் தூங்கிக்கொண்டிருந்த கணவனைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்த பிறகு, வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் கணவரைக் கொன்றுவிட்டுப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக அந்தப் பெண் நாடகமாடினார். இருப்பினும், மனைவியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், அவரது தொலைபேசி அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தபோது கள்ளக்காதல் விவகாரமும் கொலையின் பின்னணியும் அம்பலமானது. இதனையடுத்து மனைவியையும் அவரது கள்ளக்காதலனையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.