“உன் பொண்டாட்டி இருந்தா நான் உல்லாசமாக இருக்க முடியாது”… கள்ளக்காதலனின் மனைவி, குழந்தையை தீவைத்து எரித்த பெண்…. நடுக்கவைக்கும் சம்பவம்….!

By Nanthini on மாசி 2, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில், ஒரு பெண் தனது கள்ளக்காதலனின் மனைவி மற்றும் 6 மாத குழந்தையை உயிரோடு எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்கொண்டா மாவட்டம் நாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த நகேஷ் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதான சுஜாதா என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

நகேஷின் மனைவி மமதா (25), தனது கணவரின் தவறான உறவைக் கண்டித்ததோடு, சுஜாதாவுடனான தொடர்பைக் கைவிடுமாறு வலியுறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுஜாதா, மமதா உயிரோடு இருக்கும் வரை தன்னால் நகேஷுடன் நிம்மதியாக இருக்க முடியாது என்று கருதி, அவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார். இதற்காகத் தகுந்த நேரத்தை எதிர்பார்த்து அவர் காத்திருந்துள்ளார்.

   

சம்பவத்தன்று நகேஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்ற சுஜாதா, மமதா தனது 6 மாத குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தபோது, மறைத்து வைத்திருந்த பெட்ரோலை இருவர் மீதும் ஊற்றித் தீ வைத்துள்ளார். இதில் உடல் கருகி அலறிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி தாயும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய சுஜாதாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.