அய்யோ இப்படி ஒரு கொடூரமா?… 2 பிஞ்சு குழந்தைகளை கொன்று இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 11, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் ராாய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயலட்சுமி (27) என்ற பெண்ணுக்கு திருமணமாகி பிரிண்டா (4) என்ற மகளும் ஒரு வயதில் புவன் என்ற மகனும் இருந்தனர். விஜயலட்சுமியின் கணவர் பெங்களூரில் உள்ள வணிக வளாகத்தில் வேலை செய்து வரும் நிலையில் விஜயலட்சுமி தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே விஜயலட்சுமி நேற்று முன்தினம் மாலை தன்னுடைய 2 குழந்தைகளையும் கழுத்தை நிறைத்து கொலை செய்துவிட்டு பிறகு அவரும் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வரைந்த போலீசார் மூன்று பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதை சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவருடன் ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஜயலட்சுமி இந்த விபரீத முடிவு எடுத்தாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.