ரூ.1.5 லட்சம் கடனுக்கு ரூ.11 லட்சம் வட்டி…. பெங்களூரில் பெண்ணை கடத்தி ஆடையை கழற்றி வீடியோ…. அம்பலமான திடுக்கிடும் தகவல்….!

By Nanthini on புரட்டாதி 6, 2026

Spread the love

பெங்களூரில் ரூ.1.5 லட்சம் கடன் பிரச்சனைக்காக 30 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டு, இரண்டு நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், நசாத் என்பவரிடம் ரூ.50 ஆயிரமும், ரேஷ்மா பானு என்பவரிடம் ரூ.1 லட்சமும் கடன் வாங்கியிருந்தார். நிதி நெருக்கடி காரணமாக தவணைத் தொகையைச் செலுத்த முடியாமல் போன நிலையில், ஆகஸ்ட் 27 முதல் 31-ஆம் தேதி வரை சந்திரா லேஅவுட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த அக்கிரமம் அரங்கேறியுள்ளது.

வேலை விஷயமாகப் பேச வேண்டும் என்று கூறி அந்தப் பெண்ணை வரவழைத்த கும்பல், அவரைத் தாக்கி செல்போனையும் உடைத்துள்ளது. பின்னர், அவரது மகனுடன் சேர்த்து ஆட்டோவில் கும்பல்கோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று அடைத்து வைத்துள்ளது. அங்கு அவரை ஆடைகளைக் கழற்றச் சொல்லி வற்புறுத்தி வீடியோ எடுத்ததுடன், வட்டியுடன் சேர்த்து ரூ.11 லட்சம் தர வேண்டும் என்றும், இல்லையெனில் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி சில ஆவணங்களில் கட்டாயப்படுத்தி கையெழுத்தும் வாங்கியுள்ளனர்.

   

இறுதியில், கழிவறைக்குச் செல்வதாகக் கூறி புத்திசாலித்தனமாகத் தப்பித்த அந்தப் பெண், காவல் துறைக்குத் தகவல் தெரிவித்து மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சந்திரா லேஅவுட் காவல் நிலையப் போலீசார், இரு பெண்கள் உட்பட மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.