ஓடும் ரயிலிலிருந்து திடீரென கீழே குதித்த பெண்… அடுத்த நொடியே நடந்த பயங்கரம்… ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on ஐப்பசி 28, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு லைக் பெற வேண்டும் என்பதற்காக ஆபத்தான சாகசங்களை செய்கின்றனர். தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ரயில் ஒன்று அதிவேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில் ரயிலில் பயணித்த பெண் ஒருவர் ரயிலின் கதவை திறந்து கதவுக்கு அருகே இருந்து ஏதோ செய்ய தயாராகின்றார்.

முதலில் இது ஒரு சாதாரண சாகச வீடியோ என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் திடீரென்று அந்தப் பெண் ரயிலின் படிக்கட்டில் சில படிகள் இறங்கி திடீரென்று ஓடும் ரயிலில் இருந்து குதித்து விட்டார். அவர் கீழே விழுந்த போதும் ரயில் நிமிடங்களில் கடந்து சென்று விட்டது. ஆரம்பத்தில் காயம் பெரிதாக தெரியவில்லை என்றாலும் இந்த சம்பவம் ஆபத்து மிகுந்ததாக கருதப்படுகிறது. இந்த காட்சி இணையத்தில் வெளியாகி பலரையும் பதற வைத்துள்ளது. இவ்வளவு ஆபத்தான செயலை அவர் ஏன் செய்தார் என்று இதுவரை தெரியவில்லை. இதனை சமூக வலைத்தளங்களில் கண்ட ரயில்வே போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.