தமிழகத்தில் பயங்கரம்… மனைவியை கொலை செய்து whatsapp ஸ்டேட்டஸ் வைத்த கணவன்… குலை நடுங்க வைக்கும் கொடூர சம்பவம்…!

By Nanthini on மார்கழி 1, 2025

Spread the love

கள்ளக்காதல் என்பது உலகம் முழுவதும் தற்போது அதிகமாகவே உள்ளது. மனைவியை பிடிக்காத கணவன் வேறொரு பெண்ணுடனும் கணவனை பிடிக்காத மனைவி வேறொரு ஆணுடனும் கள்ளக்காதலின் ஈடுபடுவது தற்போது சாதாரணமாகிவிட்டது. இதனால் இறுதியில் குழந்தைகளின் வாழ்க்கை தான் பாதிக்கப்படுகிறது. அதே சமயம் கள்ளக்காதல் பிரச்சனையில் கொலை சம்பவங்களும் அதிகரித்துவிட்டது. அப்படி ஒரு சம்பவம் தான் கோவையில் நடந்துள்ளது. கோவையை சேர்ந்த பாலமுருகன் என்பவருடைய மனைவி வேறொரு நபருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து உள்ளார். இதனை ஒரு கட்டத்தில் அறிந்து கொண்ட பாலமுருகன் தனது மனைவியை கண்டித்துள்ளார்.

ஆனால் அவர் தனது கள்ள காதலை கைவிடாததால் ஆத்திரமடைந்த பாலமுருகன் மனைவியை அறிவாளால் வெட்டி கொலை செய்து சடலத்துடன் செல்பி எடுத்து அதனை தனது whatsapp ஸ்டேட்டஸில் வைத்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் சார்பாக பாலமுருகனின் மனைவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பாலமுருகனை தற்போது கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதல் தொடர்பாக பாலமுருகன் பல நாட்களாகவே மனைவியை கண்டித்ததும் அவர் கள்ளக்காதலை கைவிடவில்லை என்பதால் ஆத்திரத்தில் பாலமுருகன் இதை செய்ததாகவும் தெரிகிறது.