பிரபல தொலைக்காட்சியில் வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதை தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் நீயா நானாவில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் விவாதம் நடைபெறும். இவ்வாறு நீயா நானாவில் வாதிடப்படும் சில தலைப்புகள் சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தை கிளப்பும். அந்த வகையில் கடந்த வாரம் சிறுவயது முதல் தனியாக வளர்ந்த மனைவிகள், அவர்களுக்கு வாழ்க்கை கொடுத்து ராணி போல வாழ வைக்கும் கணவர்கள் என இரண்டு பிரிவாக வாதத்தில் கலந்து கொண்டார்கள். அதில் பேசிய பெண் ஒருவர் தற்போது சமூக வலைதளத்தில் பிரபலமாகிவிட்டார்.
திருமணமாகி இரண்டு மாதத்தில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த அவருடைய கணவன் இறந்து விட்டார். அதன்பிறகு மாமியார் தனது இரண்டாவது மகனுக்கு அந்த பெண்ணை மறுமணம் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இரண்டாவது திருமணம் ஆகி ஒன்பது வருடங்களாகியும் இதுவரையும் இருவரும் ஒன்று சேர்ந்து வாழ ஆரம்பிக்கவில்லை என்று மனம் திறந்து பேசி இருந்தார். இதனை அடுத்து பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அப்பெண்,” என்னுடைய கணவர் இறந்த பிறகு அவரை எரித்து சுடுகாட்டிற்கு 10 நாட்களுக்குப் பின்னர் சென்று அவர்களை சாம்பலை சாப்பிட்டேன். அதை முகம் எல்லாம் பூசிக் கொண்டேன். என்னுடைய திருமண சேலைக்குள் அவருடைய எலும்புகள் எல்லாம் இருக்கிறது. அந்த சாம்பல் சாப்பிடும்போது ஜெல்லி போன்று இருக்கும். வாயில் ஒட்டிக் கொள்ளும் என்று பேசியுள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் பொழுது அவர் தன்னுடைய கணவர் மீது கொண்டிருந்த தீராத காதல் தெரிகிறது.
