தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவருக்கு அக்., 5ஆம் தேதி வீடியோ அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த வீடியோ அழைப்பில் பேசிய பெண், இளைஞரின் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டி 2.6 லட்சம் பணத்தை பறித்துள்ளார். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால், இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது போன்ற மோசடிகளில் இளைஞர்களின் பணம், பொருள் பறிபோவதோடு மட்டுமன்றி எதிர்காலமும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால், அடையாளம் தெரியாத எண்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
