புனே மாவட்டத்தின் பிம்பிரி-சிஞ்ச்வத் பகுதிக்கு உட்பட்ட வகத் பகுதியில், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஷில்பா சச்சின் கவாரே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை மற்றும் சொத்து கேட்டு கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பாக, ஷில்பாவின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரது கணவர் சச்சின் கவாரே, மாமனார் மற்றும் மைத்துனர் மீது வகத் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையில் அளிக்கப்பட்டுள்ள புகாரின்படி, ஷில்பாவின் கணவர் மற்றும் கணவர் வீட்டார் ஆகியோர் ஷில்பாவை அவரது பெற்றோர் சொத்தில் பங்கு கேட்டு வற்புறுத்தியதுடன், அதற்காக அவரைத் தொடர்ந்து உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தித் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு முந்தைய நாள் வெளிச்சத்திற்கு வந்த இந்தத் துயரச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெறும் கோபத்தையும் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த மரணம் தொடர்பான முழுமையான உண்மைகளைக் கண்டறிய வகத் காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை கொடுமை தொடர்பான புகார்களின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
