பண்டிகைகளின் மகிழ்ச்சியில் நிறைந்த நேரம் ஒரு துயரமாக மாறிய சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பர்னாலா மாவட்டத்தில் நடைபெற்ற கர்வா சவுத் பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஆஷா ராணி (59) என்ற பெண் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார். மகிழ்ச்சி மற்றும் இசை என இருந்த அந்த இடம் சற்று நேரத்தில் துயரமாக மாறியது. ஆஷா ராணி தனது தோழிகளுடன் பஞ்சாபி பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென அவர் மயங்கி விழுந்ததால் அங்கு இருந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மஞ்சள் நிற சேலை அணிந்திருந்த ஆஷா ராணி மகிழ்ச்சியுடன் நடனமாடி கொண்டிருப்பதும் பிறகு திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பதும் அந்த வீடியோவில் தெரிகிறது. மகிழ்ச்சியான தருணம் திடீரென்று துயரமாக மாறியது. தற்போது அந்த வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Karwa Chauth celebration in Barnala turn tr@gic after woman coll@pses while dancing#KarwaChauth #KarwaChauthcelebration pic.twitter.com/dz3G5APp7r
— True Scoop (@TrueScoopNews) October 13, 2025
