ஸ்கூட்டியில் சென்ற பெண்…! திடீரென கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்…. அடுத்த நொடியே துடிதுடித்து பலியான சோகம்… கதறும் குடும்பத்தினர்…!!

By Devi Ramu on ஐப்பசி 22, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி சிவசங்கர் காலனி பகுதியில், தனது ஸ்கூட்டரில் பணியிடத்திற்குச் சென்றுகொண்டிருந்த 38 வயதுப் பெண் வித்யா மஞ்சுநாத் கௌதார் என்பவர், கழுத்தில் மாஞ்சா நூல் பறந்து வந்து அறுத்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பாரத் நகரைச் சேர்ந்த லேப் டெக்னீசியனான வித்யா மதியம் பணியிடத்திற்குச் செல்லும்போது எதிர்பாராதவிதமாக அவர் கழுத்தில் மாஞ்சா கயிறு சுற்றியதில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது. நிலை தடுமாறி ஸ்கூட்டரில் இருந்து சாலையில் விழுந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடித்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

   

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ஹுப்பள்ளி – தார்வாட் காவல் ஆணையர் பூஷன் ஜி.போராஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், ஆபத்தான இந்த நூல்களை விற்போர் மற்றும் பயன்படுத்துவோர் மீது கடுமையான கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளார்.