“கொதிக்கும் சாம்பார் அண்டாவில் விழுந்த பெண்…” விநாயகர் சதுர்த்தி விழாவில் நடந்த விபரீதம்… உணவு தயாரிப்பின் போது நேர்ந்த பயங்கரம்… பெரும் சோகம்…!!

By Devi Ramu on புரட்டாதி 22, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காகப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க பிரம்மாண்ட அண்டாவில் உணவு மற்றும் சாம்பார் தயாரிக்கப்பட்டு வந்தது. அப்போது அங்குத் தயார் செய்யப்பட்ட சாம்பார் அண்டாவை எடுத்துச் செல்ல முயன்றபோது, எதிர்பாராதவிதமாகப் பெண் ஒருவர் கால்தடுமாறி கொதித்துக் கொண்டிருந்த சாம்பார் அண்டாவிற்குள் விழுந்தார். உடலெங்கும் படுகாயமடைந்து வலியால் துடித்த அவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அப்பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.