இணையத்தில் மலிவான விலைக்கு வாங்கிய எஃகு உணவுப் பெட்டியின் விளிம்பில் கருப்பு நிறத்தில் ஏதோ ஒன்று தென்பட்டதை அடுத்து, பெண் ஒருவர் கத்தியால் அதன் பிளாஸ்டிக் விளிம்பை வெட்டிப் பார்த்தார். அப்போது உள்ளே காய்ந்த நிலையில் ஒரு கருமையான பொருள் இருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இந்தத் தரம் குறைந்த உணவுப் பெட்டிகள் நமது ஆரோக்கியத்திற்குப் பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்றும், இது போன்ற பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அந்தப் பெண் அந்த வீடியோவில் எச்சரித்திருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், அந்தப் பெண் கூறியது போல அது ஆபத்தான விஷயம் அல்ல என்றும், உணவுப் பெட்டிகளைச் சூடாக வைத்திருக்கப் பயன்படும் இன்சுலேஷன் பொருள் மட்டுமே காலப்போக்கில் அப்படி மாறியுள்ளது என்றும் பல நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்தனர்.
https://www.instagram.com/reel/DeKenu-TPNW/?utm_source=ig_web_button_share_sheet
மேலும், இது பிராண்டட் அல்லது சாதாரண பெட்டி எதுவாக இருந்தாலும் காலப்போக்கில் தேய்மானம் அடையக்கூடியதுதான் என்றும், முறையான பராமரிப்பு மற்றும் ஆய்வு இல்லாமல் இது போன்ற முடிவுகளுக்கு வரக்கூடாது என்றும் சமூக வலைதள பயனர்கள் அந்தப் பெண்ணுக்குப் பதிலடி கொடுத்தனர்.
