உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் வெளிநோயாளி பிரிவில் பெண் ஒருவர் மருத்துவரின் நாற்காலியில் அமர்ந்து கொண்டு கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், மருத்துவமனைக்குள் நுழைந்த அந்தப் பெண், மருத்துவரின் மேஜை மீது இருந்த கோப்புகளை நாலாபுறமும் தூக்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அவரை அமைதிப்படுத்த முயன்றபோது, அவர் தனது பையிலிருந்து ஒரு பெரிய கத்தியை எடுத்து அவர்களை நோக்கி பிராண்ட் செய்து மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன மருத்துவமனை ஊழியர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த மருத்துவர்களின் நாற்காலியில் அந்தப் பெண் நின்றுகொண்டும், அமர்ந்துகொண்டும் தொடர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்தப் பெண்ணை மிகவும் சிரமப்பட்டு மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளதாகப் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
