“பெத்தவங்களால இனியும் முடியாது, நான் செத்துடுறேன்”… கணவனின் வெறிச்செயலால் இளம்பெண் விபரீத முடிவு…!

Spread the love

பெங்களூருவில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பனசங்கரி பகுதியைச் சேர்ந்த குருபிரசாத் என்பவருக்கும், கீர்த்தி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்காக கீர்த்தியின் பெற்றோர் சுமார் 35 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களது வாழ்க்கையில், குருபிரசாத் சொந்தமாக வீடு கட்டத் திட்டமிட்டபோது விரிசல் ஏற்படத் தொடங்கியது.

வீடு கட்டுவதற்குத் தேவையான கூடுதல் பணத்தை கீர்த்தியின் பெற்றோரிடம் கேட்டு வாங்கி வருமாறு குருபிரசாத் கட்டாயப்படுத்தியுள்ளார். ஏற்கனவே தாராளமாகச் செலவு செய்திருந்த நிலையில், மீண்டும் பணம் கேட்க மனமில்லாமல் கீர்த்தி மறுத்துள்ளார். இருப்பினும், கடந்த டிசம்பர் மாதம் கீர்த்தியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி 8 லட்சம் ரூபாயை குருபிரசாத்திடம் கொடுத்துள்ளனர். ஆனால், அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னரும் மனநிறைவு அடையாத குருபிரசாத், கூடுதல் வரதட்சணை கேட்டு கீர்த்தியைத் தொடர்ந்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்ரவதை செய்து வந்துள்ளார்.

தொடர்ந்து அதிகரித்த வரதட்சணை கொடுமையாலும், தனது பெற்றோரின் ஏழ்மை நிலையைக் கண்டும் மனமுடைந்த கீர்த்தி, கடந்த 24-ஆம் தேதி இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீர்த்தியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாகப் பனசங்கரி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணவர் குருபிரசாத்தைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

4 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

4 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

4 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

5 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

5 மணத்தியாலங்கள் ago