திமுகவின் 8,000 ரூபாய் கூப்பன் அறிவிப்பு தொடர்பாகத் திருச்சி மண்ணச்சநல்லூரில் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இதுபோன்ற தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்றும், இது திமுகவின் தோல்விப் பயத்தையே காட்டுகிறது என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும், சாதாரண மக்களின் ஜனநாயக உரிமையான தேர்தலை, அரசியல் கட்சிகள் தங்களின் அதிகாரப் பசிக்காக ஒரு ‘சதுரங்க வேட்டை’ போலப் பயன்படுத்துவதாகவும், “மக்களை ஏமாற்றிப் பிழைக்க இது என்ன இரிடியம் விற்பனையா?” என்று காட்டமான கேள்விகள் எழுப்பியுள்ளார். இத்தகைய ஏமாற்று வித்தைகள் அப்பாவி மக்களைப் பாதிப்பதாகவும் ஜனநாயகத்திற்கு எதிரான இத்தகைய கூப்பன் விநியோகங்களின் போது ஏற்பட்ட மன உளைச்சலால்தான் அந்தப் பெண் உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மக்களை இதுபோன்று தவறாக வழிநடத்துவது கண்டிக்கத்தக்கது என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
