கவுகாத்தியில் அதிர்ச்சி சம்பவம்: பைக்கில் வந்த கொள்ளையர்கள் கைப்பை பறிக்க முயன்றதில் பெண் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டார். கஹிலிபாரா பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 5 அன்று கஹிலிபாரா சாலையில் அந்தப் பெண் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஸ்கூட்டரில் வந்த இருவர் அவரது பையை திடீரெனப் பறிக்க முயன்றுள்ளனர். பையை தப்பிக்கவிடாமல் அந்தப் பெண் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவே, திருடர்கள் ஸ்கூட்டரை வேகமாக முன்னோக்கி ஓட்டிச் சென்றதில் அவர் சாலையில் சில தூரம் இழுத்துச் செல்லப்பட்டார்.
https://twitter.com/contentkikamii/status/2109546572115767669/video/1
சம்பவத்தையடுத்து அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
