என்னா அடி…! நீதிமன்ற வாசலிலேயே கணவர், மாமனாரை துரத்தி துரத்தி செருப்பால் அடித்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 15, 2025

Spread the love

உத்திர பிரதேசம் மாநிலம் ராம்பூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான சில மாதங்கள் கழித்து அந்த பெண்ணை அவரது கணவர் அடித்து துன்புறுத்தி உள்ளார். மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதற்கிடையே அந்த பெண்ணின் கணவர் தனது குழந்தைகளையும் வலுக்கட்டாயமாக மனைவியிடம் இருந்து பிரித்து அழைத்துச் சென்றார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது அந்த பெண்ணின் கணவரும் மாமனாரும் நீதிமன்றத்திற்கு வந்து வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டி தாக்கியுள்ளனர். இதனால் கோபமடைந்த பெண் தனது கணவரையும் மாமனாரையும் செருப்பால் துரத்தி துரத்தி அடித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.