இப்படி ஒரு அவலமா?… நடுத்தெருவில் கணவனும் மாமனாரும் சேர்ந்து பெண்ணை தாக்கிய கொடூரம்… நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தும் வீடியோ.. !

By Nanthini on ஐப்பசி 19, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மீதான வன்முறை என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூகத்தில் பெண்கள் மீதான வன்முறையை தணிக்க வேண்டிய நேரத்தில் அரசியலும் சமூகப் பொறுப்பும் கூடி செயல்பட வேண்டியது அவசியமாகியுள்ளது. தற்போது ராஜஸ்தானில் நடந்த ஒரு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் தந்தேராஷ் பண்டிகை நாளன்று கொடூர தாக்குதல் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லட்சுமி பூஜை நடைபெறும் சமயத்தில் ஒரு பெண்ணை அவருடைய கணவரும் மாமனாரும் நடுத்தெருவில் தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது. விவேக் விஹார் காவல் நிலைய பகுதியில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தில் இருவரும் அந்த பெண்ணை அறைந்து, அடித்து உதைத்து தாக்கியுள்ளனர்.

அருகில் இருந்தவர்கள் யாரும் தலையிடாமல் சிலர் மொபைலில் பதிவு செய்தது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் குற்றம் சாட்டப்பட்ட கணவரையும் மாமனாரையும் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரியின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீஸ் நடத்திய விசாரணையில், அந்தப் பெண்ணின் கணவர் ஒரு அரசு பள்ளி ஆசிரியர் என்பது தெரிய வந்துள்ளது. தம்பதியினர் இடையே நீண்ட கால தகராறு மற்றும் துன்புறுத்தல் இருந்து வந்ததாகவும் சம்பவத்தன்று அது வன்முறையாக மாறியதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.