17 வயது சிறுவனுடன் பழக்கம்…! ஒதுக்குப்புறமாக அழைத்து சென்ற 45 வயது பெண்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

By Devi Ramu on புரட்டாதி 25, 2025

Spread the love

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவர் தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வராததால் பெற்றோரும் உறவினர்களும் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவனை தேடி வந்தனர். அப்போது ராமநாத குப்பம் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் கல்லூரி மாணவர் நின்று கொண்டிருப்பதை பார்த்த போலீசார் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாக அந்த மாணவருக்கும் 45 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

   

அந்த பெண் ஆசை வார்த்தைகள் கூறி மாணவரை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று அவ்வபோது பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்றும் அந்த பெண் மாணவரிடம் அத்துமீறி உள்ளார். இதனால் அந்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர். மாணவனை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.