“எதுக்கு வீட்டுக்கு லேட்டா வந்த”… பெற்றோர் திட்டியதால் தாத்தாவை பேட்டால் அடித்துக் கொன்ற பேத்தி…. பின்னணியில் வெளிவந்த அதிர்ச்சி காரணம்….!

Spread the love

சிறுவயதில் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாத்தாவை, பெற்றோர் திட்டிய ஆத்திரத்தில் 20 வயது இளம்பெண் கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொன்ற சம்பவம் இந்தூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்தப் பெண், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மோட்டார் சைக்கிளில் தாத்தாவின் வீட்டிற்குச் சென்று, தூங்கிக்கொண்டிருந்த அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த முதியவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மத்தியப் பிரதேச சிறப்பு ஆயுதப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அந்த தாத்தா, இளம்பெண் சிறுமியாக இருந்தபோதே அவரிடம் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அப்போது பெற்றாரிடம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, குடும்பத்தினர் அந்த வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வந்துள்ளனர். இருப்பினும், சிறுவயதில் ஏற்பட்ட அந்த மன வடுவும், தனக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கிடைக்கவில்லை என்ற கோபமும் அந்தப் பெண்ணின் மனதிற்குள் ஆறாத காயமாகவே இருந்து வந்துள்ளது.

சம்பவத்திற்கு முந்தைய நாள் இரவு, வீட்டிற்குத் தாமதமாக வந்த காரணத்திற்காகப் பெற்றோர் அந்தப் பெண்ணைக் கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அவரது பாதுகாப்பு குறித்து பெற்றோர் கவலை தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அப்பெண், “சிறுவயதில் சொந்த வீட்டிலேயே தாத்தா என்னைச் சீண்டியபோது அமைதியாக இருந்த நீங்கள், இப்போது என் பாதுகாப்பைப் பற்றிப் பேசுகிறீர்களா?” எனக் கோபத்துடன் கத்திவிட்டுத் தன் அறைக்குச் சென்றுள்ளார். பெற்றோரின் இந்த விவாதம், சிறுவயது மன அழுத்தத்தை மீண்டும் தூண்டி அக்ரோஷமாக வெடிக்கச் செய்துள்ளது.

இதன் விளைவாக, அதிகாலையிலேயே கிரிக்கெட் பேட்டை எடுத்துக்கொண்டு தாத்தாவின் வீட்டிற்குச் சென்ற அப்பெண், முகம் மற்றும் தலையில் கொடூரமாகத் தாக்கிப் பழிவாங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம்பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவயதில் நடக்கும் பாலியல் அமத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், சிறுவயதில் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாத்தாவை 20 வயது இளம்பெண் கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு வீட்டிற்கு தாமதமாக வந்த காரணத்திற்காகப் பெற்றோர் கண்டித்த நிலையில், ஆத்திரமடைந்த அப்பெண் அதிகாலை 3 மணியளவில் மோட்டார் சைக்கிளில் தாத்தாவின் வீட்டிற்குச் சென்று இக்கொடூரத்தைச் செய்துள்ளார்.

முன்னாள் சிறப்பு ஆயுதப் படை வீரரான தாத்தாவின் வீட்டிற்குச் சென்ற இளம்பெண், கதவு திறக்கப்பட்டதும் நேராகத் தாத்தாவின் அறைக்கு விரைந்துள்ளார். தான் கொண்டு வந்த கிரிக்கெட் பேட்டால் தாத்தாவின் தலை மற்றும் முகத்தில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், தனது சிறுபிராயத்தில் தாத்தா செய்த பாலியல் அத்துமீறலே இக்கொலைக்குக் காரணம் என அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். சிறுமியாக இருந்தபோது தாத்தா தனக்கு இழைத்த அநீதி குறித்துப் பெற்றோரிடம் கூறியதைத் தொடர்ந்து, அவர்கள் குடும்பத்தோடு அந்த வீட்டிலிருந்து வெளியேறித் தனியாக வசித்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று இரவு தாமதமாக வந்த மகளிடம் பாதுகாப்பு குறித்து பெற்றோர் எச்சரித்தபோது, “சிறுவயதில் சொந்த வீட்டிலேயே எனக்குப் பாதுகாப்பு இல்லாதபோது பேசாத நீங்கள், இப்போது பேசுகிறீர்களா?” எனக் கூறி வாக்குவாதம் செய்துள்ளார். பெற்றோரின் கண்டிப்பால் சிறுவயது மன அழுத்தம் மீண்டும் வெடித்து தீவிரமடைந்ததன் விளைவாகவே, அப்பெண் அதிகாலையில் சென்று இந்த பழிவாங்கும் கொலையைச் செய்துள்ளதாகக் காவல்துறை கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

ஏங்க எழுந்திரிங்க… நாம வீட்டுக்குப் போயிடலாம்… விபத்தில் இறந்த கணவனின் உடலைப் பிடித்து கதறிய மனைவி… திருவாரூரில் நடந்த சோகம்…!

திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…

13 minutes ago

அட கொடுமையே… பட்டாசு வெடித்தால் நிரந்தர பார்வை இழப்பு?… மருத்துவர்கள் விடுக்கும் அதிரடி எச்சரிக்கை… மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…

31 minutes ago

திக் திக்… மகளுடன் தனியாக இருந்த ஊழியர்… ஆத்திரத்தில் முதலாளி செய்த பகீர் காரியம்… பெங்களூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!

பெங்களூரில் நிகழ்ந்த ஒரு கோரச் சம்பவத்தில், தன் உற்பத்திப் பிரிவில் பணிபுரியும் கிரண் என்பவரை, தன் மகளுடன் வீட்டில் தனித்திருந்த…

35 minutes ago

என்னது… விஜய்யும் த்ரிஷாவும் ஒண்ணாவா?… ஜெகன் மோகன் ரெட்டி திருமணத்தில் நடந்த அதிரடி என்ட்ரி… உறைந்துபோன ரசிகர்கள்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ…!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…

54 minutes ago

“நவம்பர் 13-க்குப் பின் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் பூகம்பம்…. CM விஜய் ஆட்சிக்கே ஆபத்தா?”… திமுக-அதிமுக ரகசிய கூட்டணி?…. தலைமைச் செயலகத்தையே அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்….!

மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…

58 minutes ago