தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக திகழ்ந்தவர் எம்ஜிஆர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியலிலும் சினிமாவிலும் தனக்கென தனிப் பாதையை வகுத்து அதன் வழி நடந்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய் திகழ்ந்தவர் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் படங்கள் என்றாலே சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர். எம்ஜிஆர் படங்கள் வெளிவந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார். இவருக்கு இருந்தவர்கள் எல்லாம் ரசிகர்கள் அல்ல பக்தர்கள் என்றே சொல்லலாம்.
தன்னை ஆதரித்து வெற்றி நாயகனாக மாற்றிய தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார். எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர் வாரி வழங்கும் வள்ளல் அதே போல் தன் கண்முன்னால் தவறு நடக்கிறது என்றால் உடனே தட்டிக் கேட்பவர். அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
சந்திரபாபு தயாரித்து இயக்கும் மாடி வீட்டு வேலை என்ற படத்தில் நடிப்பதற்காக எம்ஜிஆர் ஒப்பந்தமாகி இருந்தார். அப்போது சந்திரபாபுவுக்கு பண உதவி செய்ய மற்றொரு தயாரிப்பாளர் முன் வந்தார். ஆனால் படம் ஆரம்பிக்கும் சில நாட்களில் அந்த தயாரிப்பாளர் எம் ஜி ஆர் இடம் வந்து அழுது இருக்கிறார். சந்திரபாபு தன் வீட்டு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார் என்று தவறாக பேசியிருக்கிறார். அவரை சமாதானப்படுத்தி நான் என்னவென்று கேட்கிறேன் என்று கூறி அனுப்பி வைத்திருக்கிறார் எம்ஜிஆர்.
பின்னர் எம்ஜிஆர் சந்திரபாபுவை அழைத்து நீ இந்த மாதிரி தவறு செய்தாயா என்று கேட்டிருக்கிறார். சந்திரபாபு ஆம் என்று கூறியிருக்கிறார். இந்த மாதிரி நீ செய்வது சரிதானா உன் தொழிலுக்கு உதவுபவர்களின் வீட்டு பெண்மணிகளை சகோதரிகளாக நினைக்க வேண்டாமா என்று கேட்டிருக்கிறார். உடனே சந்திரபாபு நான் ஒன்னும் புத்தன் இல்லை அவர்களாக வந்தார்கள் நான் ஏற்றுக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார். இந்த தவறை நீ செய்யாதே உன்னை மாற்றிக்கொள் என்று கூறியிருக்கிறார் எம்ஜிஆர். இது என்னுடைய தனிப்பட்ட விஷயம் நீங்கள் இதில் கேட்பதற்கு உரிமை இல்லை என்று கூறியிருக்கிறார் சந்திரபாபு. அப்படியா அப்படி என்றால் நான் நடிக்கும் படத்தில் இந்த மாதிரி தவறெல்லாம் நடக்கிறது இயக்குனர் தவறானவர் என்ற செய்தி வந்தால் அது என் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் என்று அந்த படத்தில் நடிக்கமாட்டேன் என்று கூறி விட்டார் எம்ஜிஆர்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…