தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் டி எஸ் ஆர் தர்மராஜ். இவரை நிறைய படங்களில் பார்த்திருக்க முடியும். விக்ரம் வேதா திரைப்படத்தில் விசாரணை கமிஷன் தலைவராக நடித்திருப்பார். சர்தார் படத்தில் அதிகாரியாகவும் விஜய் சேதுபதியின் சேதுபதி திரைப்படத்தில் விசாரணை அதிகாரியாகவும் நடித்திருப்பார். முக்கியமாக அயலி வெப் சீரிஸில் கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். சமூகத்தில் தற்போது பிரபலமாவதற்கு கையில் ஸ்மார்ட் போனும் திறமையும் இருந்தால் மட்டும் போதும் என்ற நிலை உள்ளது. ஆனால் குறிப்பிட்ட வருடங்களுக்கு முன்பு பலருக்கு திறமை மட்டும் இருந்தது. அத்தகைய திறமையை வைத்துக் கொண்டு எப்படி விரைவில் நட்சத்திரமாக ஜொலிக்கலாம் என்ற வழி தெரியவில்லை. அதற்கு அவர்களுக்கு வடிகாலாக அமைந்தது சினிமா தான்.
சினிமா மூலமாக பலரும் பிரபலமடைந்தனர். அப்படி சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியவர்தான் டி எஸ் ஆர் தர்மராஜ். இவர் இதுவரை 80 படங்கள் வரை நடித்துள்ளார். தற்போது இவர் சில திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். இதனிடையே டெக்ஸ்டைல் பிசினஸிலும் இவர் இருந்துள்ளார். இப்படியான நிலையில் பட விழா ஒன்றில் இவர் கலந்து கொண்டு பேசிய விஷயம் காண்போரை கலங்க வைத்துள்ளது. அந்த விழாவில் அவர் பேசுகையில், டெக்ஸ்டைல் துறையில் இருந்தபோது கோடி கோடியாக பணம் புழங்குபவர்களோடு பழகுவேன்.
அது பெரிய கடல். ஏறுனா பிளைட்டு இறங்கின காரு என்று இருந்தவன்தான் நான். ஆனா அதையெல்லாம் விட்டுவிட்டு தற்போது 200 ரூபாய்க்கு நடித்துக் கொண்டிருக்கிறேன். இதயத்தில் கிரவுட் ஆர்டிஸ்ட் ஆக வந்து, சேதுபதி படம் மூலமாக வளர்ந்து அயலி படம் மூலம் பிரபலம் அடைந்து விட்டேன். சினிமாவில் சில நேரம் கடுப்பாக இருக்கும். அதாவது எப்போது நாம் கோடிக்கணக்கில் சம்பாதிக்க போகிறோம் என்று தோன்றிக்கொண்டே இருக்கும். ஏனென்றால் டெக்ஸ்டைல் துறையை விட்டுவிட்டு பெரும் கனவோடு இந்த சினிமாத்துறைக்கு வந்தவன் தான் நான். நிறையவே நான் கஷ்டப்பட்டு உள்ளேன் என்று அவர் எமோஷனலாக பேசியது ரசிகர்கள் பலரையும் தற்போது கலங்க வைத்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…